Cinema

ரஜினி – கமல் படத்தில் விலகியது ஏன் ? – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

ரஜினி – கமல் படத்தில் விலகியது ஏன் ? – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் – தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் – ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு… ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களை சந்திக்கிறேன்.

இதற்கிடையில் கிடைத்த நேரத்தில்… ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன் பணம் வாங்கியிருந்தேன். அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தபோது… எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். எல்லாம் கூடி வந்ததால்… மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன்.

இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாக கேட்டதால் தான் ‘கைதி 2’ படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ.. அதற்கு ஏற்ற வகையில் தான் எனக்கு சம்பளம் தருவார்கள்.

கடந்த வாரம் ‘கைதி 2 ‘படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் ‘கைதி 2’ வாகத்தான் இருக்கும்.

இதற்கிடையில் LCU நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது. LCU என நான் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதை பின்தொடர்கிறேன். இதை நான் மட்டும் முடிவு செய்து, இனி LCU வில் படம் வராது என்று சொல்ல முடியாது. ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட். இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது. அதனால் LCU தொடர்கிறது. அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை மீண்டும் திறக்கப்படும்.  எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் படமும்  LCU வை சார்ந்தது தான்.

நானும், அமீர் கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது. அவருக்கும் நிறைய திட்டமிட்ட பணிகள் இருக்கிறது. அதனால் இருவரும் நாளடைவில் இணைந்து பணியாற்றுவோம்.‌” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button