Home

தஞ்சை ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில், “ஆண்டிகுப்பம் முதல் அமெரிக்கா” வரை என்ற முன்னாள் மாணவரின் பேச்சு சக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. !

தஞ்சை ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில், “ஆண்டிகுப்பம் முதல் அமெரிக்கா” வரை என்ற முன்னாள் மாணவரின் பேச்சு சக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வேதியியல் துறை சார்பில் மாணவர்களின் ஆற்றல் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் மற்றும் உயிரியல் ரீதியாக செயல்படும் நுனுக்ங்களுக்கான பசுமை உத்திகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான வேதியியல் மாநாடு கடந்த மார்ச் 11, அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட வேதியியல் மாணவர்கள் தங்கள் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறந்து விளங்க ஊக்குவிப்பதற்காக, இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சென்னை சவீதா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அசோக் குமார் சுந்தரமூர்த்தி மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம். பக்ததாஸ் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.

இந்நிகழ்வில் முதலாவதாக பேசிய சிறப்பு அழைப்பாளர் டாக்டர் அசோக் சுந்தரமூர்த்தி கூறுகையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டுவரை இந்தக் கல்லூரியில் எம்.எஸ்சி. தொழில்துறை வேதியியல் பயின்றது பெருமையளிக்கிறது.. தற்போது இத்துறைத் தலைவரான பேராசிரியர் டாக்டர் எம். பிரமேஷ், டாக்டர் அசோக் சுந்தரமூர்த்தியைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

பின்னர் பேசிய டாக்டர் பிரமேஷ் கூறுகையில், டாக்டர் அசோக்கின் சாதனைகள் குறித்து மிகவும் பெருமைப்படுவதாகவும், தற்போதுள்ள அனைத்து மாணவர்களும் இதேபோல் சாதிக்க வாழ்த்துவதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து டாக்டர் அசோக் சுந்தரமூர்த்தி கூறுகையில், இக்கல்லூரியில் எனக்கு வேதியியல் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை தற்போது சந்திப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம் மற்றும் பெருமை. கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் மற்றும் பிற ஊழியர்களிடமிருந்து நடந்துகொள்ளும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. https://ashoksundramoorthy.blogspot.com/ மேலும், எனது நிஜ வாழ்க்கைக் கதையை “நான் ஆண்டிக்குப்பத்தில் பிறந்து அமெரிக்காவிற்கு முதுகலை ஆராய்ச்சி செய்யச் சென்றேன்” என்ற எளிய வரியில் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன், இப்போது மிகவும் நல்ல வாழ்க்கையை வாழ்கிறேன், இவை அனைத்தும் தமிழ்நாடு பொதுக் கல்வி முறையால் சாத்தியமானது. நான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தேன். அரசுப் பல்கலைக்கழகங்களில் எனது இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முழு உதவித்தொகையுடன் பெற்றுள்ளேன். தமிழ்நாடு அரசுக் கல்வி முறைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பெருதிதமாக மாணவர்களிடையே உரையாற்றினார்.

மேலும் இந்த வேதியியல் தேசிய மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் பிற கல்லூரிகளில் இருந்து 50 சதவிகித மாணவர்கள் வந்திருந்தனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். ஜோதி ராமலிங்கம் மற்றும் டாக்டர் ஜி. முருகானந்தம் ஆகியோர் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து, பங்கேற்பு மற்றும் சிறந்த விளக்கக்காட்சி சான்றிதழ்களை வழங்கினர்.

ஆசிரிய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் சிவாஜிகணேசன், 1956 ஆம் ஆண்டு தொலைநோக்கு பார்வை கொண்ட ஸ்ரீ ஏ. வீரிய வாண்டையார் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீ ஏ. கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த கல்லூரி மாணவர் சமூகத்திற்கு செய்த மகத்தான பங்களிப்பை இம்மானாட்டில் நினைவு கூர்ந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button