தமிழ்நாட்டில் வலுவான சந்தாதாரர் வளர்ச்சியுடன் ஏர்டெல் முன்ணிலை வகிக்கிறது: !
தமிழ்நாட்டில் வலுவான சந்தாதாரர் வளர்ச்சியுடன் ஏர்டெல் முன்ணிலைவகிக்கிறது: !
TRAI அறிக்கை
TRAI link : https://trai.gov.in/sites/default/files/2025-03/PR_No.16of2025.pdf
சென்னை, 12 மார்ச் 2025 – இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சந்தாதாரர் வளர்ச்சி மூலம் அதன் மார்க்கட் தலைமையைப் பலப்படுத்தியுள்ளது என்று சமீபத்திய TRAI தொலைத்தொடர்பு சந்தா தரவு (டிசம்பர் 2024) தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு மார்க்கட்டில் ஏர்டெல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மாநிலத்தின் முதன்மைத் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டராக உருவெடுத்துள்ளது. டிசம்பர் 2024 இல் ஏர்டெல் 93,373 புதிய சந்தாதாரர்களைப் பெற்றது. இது தமிழ்நாட்டில் அதன் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 29,881,079 ஆக உயர்த்தியது. இதற்கிடையில் பிற ஆப்பரேட்டர்கள் மாறுபட்ட விளைவுகளைக் சந்தித்தனர். சிலருக்கு சந்தாதாரர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
நெட்வொர்க் விரிவாக்கம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் அதிவேகத் தரவு சேவைகளில் நிலையான முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கானவர்களின் விருப்பமான தொலைத்தொடர்புத் தேர்வாக ஏர்டெல் தொடர்ந்து விளங்கி வருகிறது.
இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை நவம்பர் 2024 இல் 1,148.65 மில்லியனில் (114.87 கோடி) இருந்து டிசம்பர் 2024 இல் 1,150.66 மில்லியனாக (115.07 கோடி) உயர்ந்தது, ஏற்பட்ட மாதாந்திர வளர்ச்சி வீதம் 0.17% ஆகும். நாட்டின் வயர்லெஸ் டெலி டென்சிட்டியும் 81.59% இல் இருந்து 81.67% ஆக அதிகரித்துள்ளது. இது மொபைல் இணைப்பில் ஏற்பட்டுவரும் நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறது.
ஏர்டெல்லின் நிலையான சந்தாதாரர் வளர்ச்சி நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலிமைப்படுத்துகிறது. 5G, ஃபைபர் நெட்வொர்க்குகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் உத்தி சார்ந்த முதலீடுகள் மூலம் ஏர்டெல் சிறந்த தரமான சேவைகளையும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களையும் வழங்கிவரும் அதேவேளையில் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியடைந்து வருவதால் ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பையும் அதிநவீன டிஜிட்டல் தீர்வுகளையும் இணையற்ற நெட்வொர்க் அனுபவத்தையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.