News
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு!

சென்னை: வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் “Rehydration Points” அமைக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தைப் பொறுத்து தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழ்நாட்டின் 46 சுகாதார மாவட்டங்களிலும் 1000 மையங்களை ஏற்படுத்த ஆணை. சென்னையில் மட்டும் 75 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த 1000 மையங்களும் ஜுன் மாதம் 30ம் தேதி வரை செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.