
சேனாபதி மேடையில் ‘சென்னை பத்திரிகா’ சிவாஜியின் 80 வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ஜூலை 12 ஆம் தேதி வெளியான ‘இந்தியன் 2’ உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தில் தமிழக ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த இரண்டாவது பாகத்தில், யாரும் நெருங்கவே முடியாத உலகளவில் பிரபலமாக இருக்கும் பெரும் மோசடி தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

சேனாபதியின் வருகையை அவரது ரசிகர்களும், திரையுலகினரும் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சேனாபதி தாத்தாவுக்கான சமீபத்திய விழா மேடையில், பத்திரிகைத்துறையில் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘சென்னை பத்திரிகா’ சிவாஜி தாத்தாவின் 80 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவிலும், பத்திரிகை உலகிலும் கொடிகட்டி பறந்த ‘மதி ஒளி’ பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் மதி ஒளி சண்முகம் அவர்களின் இளைய தம்பியான சிவாஜி அவர்கள், நடிப்புத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் இளம் வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடஙதொடர னார். சுமார் 300-க்கும் மேற்பட்ட நாடங்களில், சிவக்குமார், கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர், திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். திரைப்பட தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தீரா சினிமா ஆசையோடு வலம் வந்தவர், திரைத்துறையில் பொருளாதாரா ரீதியாக ஏற்பட்ட இழப்பை தொடர்ந்து, அரசுத்துறையில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.

திருமணம், குழந்தைகள் என்று குடும்ப வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டாலும், ஒருபக்கம் அரசு பணி மறுபக்கம் மேடை நாடகங்கள் என்று தனது நடிப்புக்கு அவ்வபோது தீணிப்போட்டுக்கொண்டிருந்தவர், தற்போது பணிஓய்வு பெற்ற பிறகும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் தொடர்ந்து சினிமா பத்திரிகையாளராக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னை பத்திரிகாவின் மாத இதழ், இணையதளம் மற்றும் யூடியுப் சேனல்களில் தலைமை நிருபராக பணியாற்றிக்கொண்டிருக்கும் சிவாஜி அவர்கள், யூடியுப் சேனலில் திரைப்பட விமர்சனங்களை வித்தியாசமான பாணியில் பேசி தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருப்பதோடு, தமிழ் சினிமா வரலாற்றின் சுவாரஸ்ய சம்பவங்களை சுவைப்பட பேசி வருகிறார். மேலும், சென்னை பத்திரிகாவின் மாத இதழ் மற்றும் இணையதளத்திலும் பரபரப்பான சினிமா செய்திகளையும், சுவாரஸ்யமான கட்டுரைகளையும் எழுதி வரும் இவரைப் பார்த்து தற்போதைய பத்திரிகையாளர்கள் செல்லமாக பொறாமை படுவதும் உண்டு.
இந்த நிலையில், கடந்த ஜூலை 6 ஆம் தேதி 80 வது வயதில் அடியெத்து வைத்திருக்கும் சிவாஜி அவர்களை கெளரவிக்கும் வகையில், அன்று சென்னை தாஜ் ஓட்டலில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ பட விழாவில் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை இளையதலைமுறை பத்திரிகையாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

80 வயதிலும் எறும்பாக பணியாற்றி வரும் சிவாஜி அவர்களை, தற்போதைய தலைமுறை பத்திரிகையாளர்கள் செல்லமாக தாத்தா என்று அழைப்பதற்கு ஏற்ப, அவரது 80 வது பிறந்தநாளை, ‘இந்தியன் 2’ தாத்தாவின் மேடையில் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளம் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அவருக்கு பத்திரிகையாளர்கள் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

80 அல்ல 100 தாண்டியும் சிவாஜி தாத்தாவின் பத்திரிகை பணி தொடர ‘சென்னை பத்திரிகா’-வின் வாழ்த்துகள்.