Cinema

“ஹேப்பி ராஜ்”(Happy Raj) திரைப்பட விமர்சனம்…

ஹேப்பி ராஜ்”
(Happy Raj) திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : –
ஜிவி பிரகாஷ்,
ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மேரியன், ஈத்தா

கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, தேவி மகேஷ்,

பிரார்த்தனை நாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் ‌: –
மரிய ராஜா இளஞ்செழியன்.

மியூசிக் : – ஜஸ்டின் பிரபாகரன்.

ஒளிப்பதிவு:-
மதன் கிறிஸ்டோபர்.

படத்தொகுப்பு:-
செல்வா.ஆர்.கே.

தயாரிப்பாளர்கள்:- பியோண்ட் பிக்சர்ஸ் – ஜெய்வர்தா.

தனது உருவம் மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ்,

அம்சமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன்,

அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார்.

ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம்

ஏற்படுவதாக கருதும், ஜி.வி.பிரகாஷ், அவரை விட்டு

விலகி, தனது அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார்.

வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கு கதாநாயகி
ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

பணக்காரரான
ஸ்ரீ கெளரி பிரியாவின் தந்தை அப்பாஸ், மகள்

காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திருமண ஏற்பாடுகள்

தொடங்கும் போது ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனின்

எளிமையான தோற்றம் மற்றும் எதார்த்தமான செயல்களை பார்த்து கோபமடையும்

அப்பாஸ், அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார்.

உருவத்தை பார்த்து ஒருவர் தகுதியை தீர்மானிக்கும்

அப்பாஸுக்கு, ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்டுகிறார். இதனால்,

இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திருமணம் நின்று விடுகிறது.

திருமணம் நின்று போனதற்கு தனது தந்தை தான் காரணம் என்று நினைக்கும்

ஜி.வி.பிரகாஷ், அவரை வைத்தே தனது காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி

நின்ற திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார்.

அவரது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதை சிரிக்க,

சிந்திக்க வைக்க சொல்வது தான் “ஹேப்பி ராஜ்”

ஜி.வி.பிரகாஷ், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் படம் முழுவதும்

பார்வையாளர்களை ஹேப்பி மூடில் பயணிக்க வைத்தாலும், கிளைமாக்ஸ்

நெருக்கத்தில் தனது அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் காட்சிகளில் கண்கலங்க வைத்து

விடுகிறார். நடனம், உடை, உருவம் என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும்

ஜி.வி.பிரகாஷுக்கு இதுபோன்ற கதாபாத்திரம் பழக்கப்பட்டது என்றாலும், அப்பா

மீதான கோபம் மற்றும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகளில்

உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிற
ஸ்ரீ கெளரி பிரியாவுக்கு அதிக வேலையோ, அழுத்தமான

கதாபாத்திரமோ இல்லை. கதாநாயகனை காதலிப்பது, அவருடன் நடனம் ஆடுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட

வழக்கமான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கிறார் ஜார்ஜ் மரியன், நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து சிறந்த

குணச்சித்திர நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார். கதாநாயகனுக்கு இணையான மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு

பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சரியாக பொருந்தியிருக்
கிறார் ஜார்ஜ் மரியன், தனது இயல்பான உடல் மொழி மற்றும் வசன

உச்சரிப்பு மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் தங்கி விடுகிறார்.

கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார் அப்பாஸ், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக

இருப்பதுடன், தனக்கு கொடுக்கப்பட்ட

வேலையை கச்சிதமாக சரியாகவும் செய்திருக்கிறார்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். கீதா கைலாசம், வழக்கமான

கதாபாத்திரத்தில், சில வழக்கத்திற்கு
மாறான காட்சிகளில் நடித்து அலப்பறை செய்திருக்கிறார்.

மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் ஆகியோர் வரும் காட்சிகள் கொஞ்சம்

சிரிக்க வைக்கிறார் கள். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறார் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரி காதலி பிரார்த்தனா நாதன்

ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல்

அம்சங்களுடன் பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக

படமாக்கி படத்தை பிரமாண்டமாக காண்பித்திருக்
கின்றனது

குறிப்பாக கதாநாயகி மீது தனி கவனம் செலுத்தியிருக்
கிறார். ஒளிப்பதிவாளர்

அவரை பளபளப்பாக காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருக்
கிறார்.

படத்தொகுப்பு செல்வா.ஆர்.கே-வின் படத்தொகுப்பு

திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறார்.

தந்தை – மகன் இடையிலான புரிதல் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை நகைச்சுவை

பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன்,

உருவ கேலிக்கு ஆளாகும் நபர்களின் மன வலி மற்றும் அதனை தாண்டிய

அவர்களுக்கான மகிழ்ச்சியை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் ஹீரோ அப்பா என்று சொன்னாலும், அந்த அப்பாக்களையே

அவமானமாக பார்க்கும் சில பிள்ளைகளுக்கு சாட்டையடி அறிவுரை

சொல்லியிருக்கிறார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், அதை பாடம்

சொல்வது போல் இல்லாமல், உணர்வுப்பூர்வமாகவும், கலகலப்பாகவும்

சொல்லி அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு முழுமையான

பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

படம் பார்த்ததில், “ஹேப்பி ராஜ்” அனைத்து தரப்பினரையும்

மகிழ்ச்சி‌ தரும் திரைப்படம் அனைவரும்

குடும்பத்துடன் திரையரங்குகளில் அவசியம் பார்க்க

வேண்டிய திரைப்படம்…
காமெடி பிளாஸ்

ஃபேமிலி சென்டிமென்ட் அப்பா மகன் கதைக்களம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button