Press Release

கும்மிடிப்பூண்டி,பொம்மாஜிக்குளம் கிராமத்தில் இருளர் சமுதாயத்தினருக்கான ரோட்டரி சங்கம் கட்டிய 29 வீடுகள் கையளிப்பு விழா.

கும்மிடிப்பூண்டி,
பொம்மாஜிக்குளம் கிராமத்தில் இருளர் சமுதாயத்தினருக்கான ரோட்டரி சங்கம் கட்டிய 29 வீடுகள் கையளிப்பு விழா.

பொம்மாஜிக்குளம் கிராமத்தில், “வீடுகள் இல்லாதோருக்கான வீடுகள்” திட்டத்தின் கீழ், இருளர் சமுதாயத்தினருக்காக உருவாக்கப்பட்ட புதிய வீடுகளின் கையளிப்பு விழா கும்மிடிப்பூண்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வீடுகள் இல்லாதோருக்கான வீடுகள்” என்ற திட்டத்தின் கீழ் 29 புதிய வீடுகள் மெட்ராஸ் ரோட்டரி சங்கத்தின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், இப்பகுதியில் வாழும் இருளர் சமுதாயத்தினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.

ஒவ்வொரு வீடும் 220 சதுர அடியில் காங்கிரீட் கூரையுடன், சமையலறை, குளியலறை மற்றும் பாரம்பரிய திண்ணையை உள்ளடக்கியது. வீடுகள் தலா ரூ. 3.6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய இத்திட்டத்தின் மூலம் குடிசைகளை அகற்றி, நிலையான மற்றும் பாதுகாப்பான வீடுகளை மெட்ராஸ் ரோட்டரி சங்கம் உருவாக்கி உள்ளது.
இதன்மூலம் இங்கு வசிக்கும் இருளர் சமூகத்தினர் தனியுரிமை, சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைவர்.

வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் சோலார் சக்தி உற்பத்தி வசதி ,மின்சார சவால்களை சமாளிக்க உதவும். மேலும், ஒவ்வொரு வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூந்தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி, ரோட்டரி சங்கத்தின் நீண்டகால சேவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். மெட்ராஸ் ரோட்டரி சங்கம், கல்வி, சுகாதாரம், சுயதொழில், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. இருளர் போன்ற பின்னடைந்த சமுதாயங்களில் மாறுதலுக்கான பெரு முயற்சிகளை மேற்கொண்டு, இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் ரோட்டரி ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர் எலெக்ட். ரோட்டேரியன் விநோத் சரோகி, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சங்கத் தலைவர் ரோட்டேரியன் ஜி செல்லா கிருஷ்ணா,செயலாளர் ராஜேஷ் மணி, சமூக சேவைகள் இயக்குநர் ரோட்டேரியன் டாக்டர் அனுராதா கணேசன், மற்றும் இத்திட்ட அலுவலர் ரோட்டேரியன் என் பிரகாஷ்,முன்னாள் தலைவர் ரோட்டேரியன் ரவி,ரோட்டேரியன் விஸ்வநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ரோட்டரி சங்கம், சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் நீண்டகால முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button