இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சீரமைத்த THINK Gas நிறுவனம்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘தோண்டுவதற்கு முன் அழையுங்கள்’ (Dial Before You Dig) நடைமுறையைப் பின்பற்றுமாறு நிறுவனம் வலியுறுத்தல்


இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சீரமைத்த THINK Gas நிறுவனம்
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘தோண்டுவதற்கு முன் அழையுங்கள்’ (Dial Before You Dig) நடைமுறையைப் பின்பற்றுமாறு நிறுவனம் வலியுறுத்தல்
காஞ்சிபுரம், நவம்பர் 19, 2026: காஞ்சிபுரம், பெரும்பாக்கம், இந்திரா நகரில் மின் கம்பங்கள் அமைக்கும் பணியின்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) ஒப்பந்ததாரரால் THINK Gas (முன்னர் AG&P Pratham) நிறுவனம் அமைத்திருந்த நகர எரிவாயுக் குழாய் சேதமடைந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன், THINK Gas நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குழாய்ப் பகுதியின் எரிவாயு விநியோகத்தைத் தற்காலிகமாகத் துண்டித்தனர். பின்னர், குறுகிய நேரத்திற்குள் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, அப்பகுதியில் எரிவாயு விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர். இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதுடன், அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியமும் குறைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வீடுகளுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றை வழங்குவதற்காக THINK Gas நிறுவனம் வலுவான குழாய் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. குழாய்கள் செல்லும் வழித்தடங்களில் தெளிவாகத் தெரியும் அடையாளக் குறியீடுகள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் அவசரகாலத் தொடர்பு எண்கள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அகழ்வுப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக THINK Gas நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கத் தவறியுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பிறகும் உரிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.
அரசு விதிமுறைகளின்படி, அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும், பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, ‘Dial Before You Dig’ தொடர்பு எண் மூலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட நகர எரிவாயு விநியோக நிறுவனத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இச்சம்பவத்தில், நிறுவனத்திற்கு முன்கூட்டியே எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படாததால், இதற்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக THINK Gas நிறுவனம் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளது. தற்போதைய சட்ட விதிகளின்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 285 மற்றும் 336-ன் கீழ், இத்தகைய அங்கீகரிக்கப்படாத சேதத்தை ஏற்படுத்துவது குற்றமாகும். இதற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அனைத்து ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்தப் பாதுகாப்பு நடைமுறையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று THINK Gas நிறுவனம் வலியுறுத்துகிறது. எந்தவொரு குழி தோண்டும் அல்லது அகழ்வுப் பணியையும் தொடங்குவதற்கு முன்பாக THINK Gas நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 2022 999.



