HomePress Release

கல்யாண்ஜூவல்லர்ஸின்இரண்டுபுதியவிற்பனைநிலையங்களைசென்னையில்கூடுவாஞ்சேரிமற்றும்புரசைவாக்கத்தில்நடிகர்பிரபுதிறந்துவைத்தார்!

கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு புதிய விற்பனை நிலையங்களை சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்!

  • கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில், உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது.

சென்னை, 28, ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரியின் ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாக்கத்தின் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய ஷோரூம்களைத் திறந்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் ப்ராண்டான கேன்டிரி [Candere]-யின் விற்பனை நிலையமும் கூடுவாஞ்சேரி விற்பனை நிலையத்துடன் சேர்ந்து இன்று திறக்கப்பட்டது. கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரத் தூதரும் நடிகருமான பிரபு கணேசன் இந்தப் புதிய ஷோரூம்களைத் திறந்துவைத்தார். வாடிக்கையாளருக்கான சேவைகளுடன் விதவிதமான வடிவமைப்புகள் கூடிய நிறைவான ஷாப்பிங் அனுபவத்தை கல்யாண் ஜூவல்லர்ஸ், கேண்டியர் இரண்டும் வழங்கும். ரசிகர்களும் வாடிக்கையாளர்கள் பெருவாரியாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் பிராண்டின் விளம்பரத் தூதுவரும் நடிகருமான பிரபு பேசும்போது, “சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு புதிய விற்பனை நிலையங்களை இன்று திறப்பதில் அளப்பறிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். கல்யாண் ஜூவல்லர்ஸுடனான என்னுடைய கூட்டுறவு ஆரம்பத்திலிருந்து உள்ளது. எங்களது இந்த உறவு தொடங்கி இன்றுவரை அவர்களது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை, வாடிக்கையாளர் திருப்தி தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பில் மற்ற எல்லாரையும் விடத் தனித்து உயரத்தில் நிற்கிறார்கள். எங்களது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு தங்கள் ஆதரவைத் தருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் செய்யும் ஒவ்வொரு நகையிலும் இருக்கும் அர்த்தம், அற்புதத்தை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கொண்டாடுகின்றனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸின் செயல் இயக்குனர் திரு. ரமேஷ் கல்யாணராமன் [Mr. Ramesh Kalyanaraman, Executive Director of Kalyan Jewellers] பேசும்போது, “ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களின் நகை வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தி ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதில் பெரிய முயற்சிகளை எடுத்து மகத்தான மைல்கற்களை எட்டியுள்ளோம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையே எங்கள் பிராண்டின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகின்றன. அதை எதற்காகவும் விட்டு கொடுக்காமல் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். கல்யாண் ஜூவல்லர்ஸில் நுட்பமும் தனித்துவமும் கூடிய நகை வடிவமைப்புகளை தரம், இணையற்ற சேவை உறுதிப்பாடுடன் தொடர்ந்து தந்துவருவோம் என்று உறுதி கூறுகிறோம்.”

கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் கிடைக்கும் சில்லறை நகைகள் அனைத்து BIS ஹால்மார்க் முத்திரை பெற்றவை. அத்துடன் தூய்மைக்கான பல சுற்றுப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டவை. எங்களிடம் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் 4 மட்ட உத்திரவாதச் சான்றிதழ் தரப்படுகிறது. மேலும், நகைகளுக்கு ஆயுள்கால பராமரிப்பு இலவசம். அத்துடன் எங்கள் தயாரிப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் தருகிறோம். வாங்கிய நகைகளை எக்ஸேஞ்ச் மற்றும் விற்பனை செய்வதற்கும் வெளிப்படையாக விவரங்கள் சொல்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை கொண்ட வாடிக்கையளர்களுக்கு மிகத் தரமானதை தரும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே கல்யாண் ஜூவல்லர்ஸின் 4 மட்ட உத்தரவாதச் சான்றிதழ் .  கல்யாண் ஜூவல்லர்ஸின் எல்லா புதிய ஷோரூம்களும் முஹூரத் என்றழைக்கப்படும் மணப்பெண் நகைகளை இந்தியா முழுவதும் விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளன. கல்யாண் ஜூவல்லர்ஸின் புகழ்பெற்ற பிராண்டுகளான, தேஜஸ்வி(போல்கி நகைகள்), முத்ரா (புராதன கைவினை நகைகள்), நிமாஹ் (கோயில் நகைகள்), க்ளோ(டான்சிங் டயமண்ட்கள்), ஜியா (டயமண்ட் ஜூவல்லரி), அனோகி(அன்கட் நகைகள்) அபூர்வா (சிறப்புத் தருணங்களுக்கான வைரங்கள்), அந்தரா(திருமண வைரங்கள்), ஹெரா (தினசரி அணியும் வைரங்கள்), ரங்க் (அபூர்வ கற்கள் பதித்த நகைகள்) மற்றும் லீலா (வண்ணக் கற்கள் மற்றும் வைரக் கல் நகைகள்) [[Tejasvi (Polki jewellery), Mudhra (Handcrafted Antique Jewellery), Nimah (Temple Jewellery), Glo (Dancing Diamonds), Ziah (Solitaire-like Diamond Jewellery), Anokhi (Uncut Diamonds), Apoorva (Diamonds for Special Occasions), Antara (Wedding Diamonds), Hera (Daily Wear Diamonds), Rang (Precious Stones Jewellery), and the recently

launched Lila (Coloured Stones and Diamond Jewellery)] ஆகிய ஆபரணத்தொகுப்புகளும் இதில் அடங்கும்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் தொடர்பிலான கூடுதல் விவரங்களுக்கு  https://www.kalyanjewellers.net/

நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

கல்யாண் ஜூவல்லர்ஸ் குறித்து :

கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகள் வரை தனது வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வர்த்தகத்தை நீடித்து நிலைக்கச் செய்து முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. மேலும் ஆபரண சந்தையில் உயரிய தரம், வெளிப்படைத்தன்மை, புதுமை, விலை நிர்ணயம் ஆகியவற்றிக்கு ஒரு புதிய வரையறை உருவாக்கி இருக்கிறது.  தனது அடையாளங்களாக கொண்டு விளங்கி வருகிறது. தங்கம், வைரம், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை கொண்டு பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கொண்ட வேலைப்பாடுகளுடன் நகைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சும்ரா 310-க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button