Cinema

72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இரண்டு விருதுகளை வென்ற ‘பிரம்மயுகம்’ திரைப்படம்!

72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இரண்டு விருதுகளை வென்ற ‘பிரம்மயுகம்’ திரைப்படம்!

சென்னை, 18 ஜூலை 2026: நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம், 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த நடிகர் – முதன்மை கதாபாத்திரம் – மம்மூட்டி, சிறந்த ஒளிப்பதிவு – ஷெஹ்னாத் ஜலால் என்ற இரண்டு முக்கியமான விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.

கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மம்மூட்டி அவர்களுக்கும், திரைப்படத்தின் கலைநயத்தையும் காட்சியமைப்பையும் தனித்துவமாக உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ஷெஹ்னாத் ஜலால் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் 72வது தேசிய திரைப்பட விருதுகளின் மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் சிறப்பான படைப்புகள் இந்திய திரைப்பட உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதோடு, இந்திய சினிமாவின் தரத்தையும் மேலும் உயர்த்தி வருகின்றன.

இந்த இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பெருமைமிகு சாதனை. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், தனித்துவமான மற்றும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற இரு நிறுவனங்களின் உறுதிப்பாட்டையும் இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியான நாள் முதல் ‘பிரம்மயுகம்’ இந்தியாவிலும் உலகளவிலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த திரைப்படம் 55 ஆவது

இந்திய சர்வதேச திரைப்பட விழா – இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியது. மேலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட்டது. 2024 கேரள மாநில திரைப்பட விருதுகளில் பல்வேறு விருதுகளை வென்றதுடன், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button