Press Release

சான்பீஸ்ட் மாரி லைட் (Sunfeast Marie Light )    தம்பதியர்கள்  தங்கள் கைபேசிகளுடனான  உறவை துண்டித்து விவாகரத்து   செய்ய   ஊக்குவிக்கிறது

சான்பீஸ்ட் மாரி லைட் (Sunfeast Marie Light )    தம்பதியர்கள்  தங்கள் கைபேசிகளுடனான  உறவை துண்டித்து விவாகரத்து   செய்ய   ஊக்குவிக்கிறது

 தங்கள் கைபேசிகளை துறந்துவிட்டு உண்மையான உரையாடல்களை மீண்டும் கண்டறியுமாறு தம்பதியர்களுக்கு இந்த பிராண்ட் அறிவுறுத்துகிறது

சென்னை: டிஜிட்டல் தொடர்புகள்  நிமிடத்திற்கு நிமிடம் வலுவடைந்து வரும் இன்றைய உலகில், நிஜ வாழ்க்கை தொடர்புகள்  ஆரவாரமில்லாமல் அமைதியாக  மறைந்து கொண்டு வருகிறது . குறிப்பாகத் தம்பதியரிடையேயான , அர்த்தமுள்ள தனிப்பட்ட உரையாடல்கள் பெரும்பாலும் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன  . சன்ஃபீஸ்ட் (Sunfeast) நிறுவனம் சென்னையில் நடத்திய ஓர்  ஆய்விவில் *, நவீன கால உறவுகளிடையே  வளர்ந்து வரும் உணர்வுபூர்வமான இடைவெளியை அழுத்தமாகச் சுட்டிக்காட்டும் வகையில்
53 சதவீத மக்கள் தங்கள் துணைவருடன் செலவிடும் நேரத்தைவிடத் தங்கள் அலைபேசியுடனேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்;

 இத்தகைய நடத்தை குறித்த செய்தியை வெளிச்சம் போட்டுக் காட்டும்    வகையில், Sunfeast Marie Light  நிறுவனம் தனது #MarieLightMode பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,  ஒரு  விசித்திரமான அதே சமயம் தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது 

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டுடனான  கூட்டாண்மையின் கீழ்  , தமிழ்நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட தம்பதியினருக்கு, அவர்களின் ஃபோன்களுடனான  விவாகரத்து ஒப்பந்தம்  ”  நகல் ஒன்றை அவர்களின் ஆர்டர்களுடன் இணைத்து  அனுப்பி   ஒரு  இன்ப அதிர்ச்சியை  அளித்தது. ஒரு உண்மையான ஒப்பந்தத்தின் பாணியில் எழுதப்பட்டிருந்த அந்த உடன்படிக்கையில்  தங்கள் ஃபோன்களை ஒதுக்கி வைத்துவிட்டு    அன்பான   மகிழ்ச்சியான தருணங்களுக்கு அதிக இடமளித்து வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டாட ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது  . இந்த சிந்தனைமிக்க செயல்பாடு, ஒரு வழக்கமான டெலிவரி நடவடிக்கையை எதிர்பாராத வகையில் ஒரு சுய சிந்தனையைத்  தூண்டும்   தருணமாக மாற்றியது.

.” ITC லிமிடெட் நிறுவன உணவுப் பிரிவின்  பிஸ்கட்ஸ் துணைத் தலைவர் & மார்க்கெட்டிங் ஹெட்   திரு. சூரஜ் கத்தூரியா கூறுகையில்,   கைபேசிகள் பல்வேறு உறவுகளுக்கிடையே   ஆரவாரமில்லாமல்  ஒரு  மூன்றாவது நபராக  மாறிவிட்ட  வெளிப்படையான ஆனால்   தர்ம சங்கடமான உண்மையை   எங்கள் ஆய்வு ,வெளிப்படுத்தியுள்ளது.  ஆழ்ந்த உள்ளுணர்வை தூண்டும் இந்த  தகவலை விளையாட்டுத்தனமான முறையில்,    நாங்கள் ஒரு சிந்தனையைத் தூண்டும் செய்தியாக மாற்றினோம். இந்தச் செயல்பாடுகளின் வழியாக , தம்பதிகள் தங்கள் கைபேசிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மேலும் அர்த்தமுள்ள, உண்மையான உரையாடல்கள் மூலம் மீண்டும் உணர்வு பூர்வமாக  இணையுமாறு நாங்கள் அவர்களைத் தூண்டினோம்,” என்றார்.

இந்த முன் முயற்சி குறித்து தனது கருத்தை தெரிவித்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்  சீனியர் வைஸ் பிரசிடெண்ட் & சீஃப் பிஸினஸ்  ஆபீஸ்    திரு. ஹரி குமார் கோபிநாதன் ,”, எங்கள் நுகர்வோரின்  அன்றாட வாழ்வின் அர்த்தமுள்ள  தருணங்களின் ஒரு பகுதியாக இருக்கவே ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். சன்ஃபீஸ்ட் மேரி லைட்டுடனான இந்தக் கூட்டாண்மை மூலம்  தம்பதிகளை ஒரு கணம் நின்று    திரைகளை  ஒரு புறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு , இயல்பாக மீண்டும் இணைந்து செயல்பட ஊக்குவிக்கும்  இந்த செயல்பாடு  உண்மையாகவே ஒரு புத்துணர்ச்சியூட்டும்  நுண்ணறிவை அளிக்கிறது . விளையாட்டுத்தனமான அதே சமயம் சிந்தனையைத் தூண்டும் இந்த  முன்னெடுப்பை நேரடியாக நுகர்வோரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வருவதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை உண்மையிலேயே சாத்தியமாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” கூறினார்.

இந்த முன் முயற்சியின்  மூலம், அன்றாட வாழ்வில் தம்பதியரிடையே அர்த்தமுள்ள உணர்வு பூர்வமான  பிணைப்புகளை – ஒவ்வொரு  இணக்கமான  தருணத்தின் வாயிலாகவும்- வளர்த்தெடுப்பதில் தனக்குள்ள    உறுதிப்பாட்டை   Sunfeast Marie Light தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

*.12/03/2025 முதல் 15/03/2025 வரை, சென்னையில் அதிகளவில் (தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக) அலைபேசியைப் பயன்படுத்தும் பயனர்களிடையே நடத்தப்பட்ட இணையவழி ஆய்வின் அடிப்படையிலானது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button