CinemaReview

பூனி பியர்ஸ் : தி ஹிடன்ப்ரொடெக்டர்” திரைப்பட விமர்சனம்…

“பூனி பியர்ஸ் : தி ஹிடன்ப்ரொடெக்டர்”

“(Boonie Bears: The Hidden Protector)” Review –

திரைப்பட விமர்சனம்…

காட்டின் பெரிய அண்ணன் பிரையர், அவன் தம்பி பிராம்பள் மற்றும்

அவர்களின் நண்பன் விக் ஆகியோர்,

புராண நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள்.

அந்த மான்ஸ்டர் தன்னுடைய மாய சக்திகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு,

அவர்களை மாய உலகமான ஈவ் சிட்டிக்கு அழைத்துச் செல்கிறார். பிரையர்

தன் “பெரிய அண்ணன்” பதவியை இழந்து, மூவரிலும் பலவீனமானவனாக மாறுகிறான்.

இதனால் ஒரு பெரிய சதி வெளியாகி, மனித உலகமும் அழியாத உலகமும் ஆபத்தில்

மாட்டு கொள்
கின்றன. இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படு
கிறார்கள், என்பதை காட்சி விருந்தாக

சொல்வது தான் கதைக்களம்
“பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்”.

அனிமேஷன் படம் இருந்தாலும் புராண பின்னணியில் சுவாரஸ்யமாக நகைச்சுவையாகவும் திரைக்கதை எடுக்கப்பட்ட ப்பட்டுள்ளதால் சிறுவர்களுடன் பெரியவர்களும்

பார்த்து மகிழலாம். குறிப்பாக விக் கதாபாத்திரத்தின் நகைச்சுவை

காட்சிகளுக்கு சிறுவர்கள் குலுங்கி குலுங்கி சிரிப்பது போல், டைமிங் நகைச்சுவை

வசனங்களுக்கு பெரியவர்களும் சிரித்து மகிழ்வது உறுதி.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக

அமைந்திருப்பதுடன், போர்க்கள காட்சிகள் மற்றும் பிரமாண்டமான சண்டைக்காட்சிகள்

அனிமேஷன் படம் என்ற அடையாளத்டை மறந்து, பிரமிக்க வைக்கும் ஒரு

ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

நியான் மான்ஸ்டர் புராணத்தை புதுமையாக விளக்கும் வகையில்

எழுதப்பட்டிருக்கும் கதையில், சீன புத்தாண்டு பழக்கவழக்கங்
களுக்கு பின்னால் உள்ள காரணத்தை

நகைச்சுவையாக சொல்லப்பட்டிரு
ப்பது .

நகைச்சுவையாக இருப்பினும் நம்மை நேசிப்பவர்களை மதிக்க வேண்டும், குடும்ப உறவுகளின்

முக்கியத்துவம், சுய மதிப்பு, கூட்டு முயற்சி ஆகிய நல்ல விஷயங்களை மிக

அழகாக கையாண்டிருப்பது சிறுவர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறது.

அனைவரும் குடும்பத்துடன் சிறுவர் சிறுமியர்

பார்க்க வேண்டிய திரைப்படம் திரையரங்குகளில்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button