Press Release

2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்றஇந்தியன் அபாகஸ் நிறுவனத்தின்தேசிய எண்கணித போட்டி

2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற
இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின்
தேசிய எண்கணித போட்டி
அமைச்சர் செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு
சென்னை, ஜூலை 20-
அகில இந்திய அளவில் சுமர் 2500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற 5-வது தேசிய எண்கணித போட்டியை மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தொடங்கி வைத்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு தேசிய எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. இதனை தமிழக சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அப்போன்ஸ் தொங்கி வைத்து பேசியதாவது:
இந்த போட்டியானது தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை. இந்த எண்கணித போட்டி குழந்தைகளின் அறிவு திறைமையை மேம்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் முதல்வர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை சிப்பாக செய்து வருகிறார். அதனை குழந்தைகள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்,
இந்த எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றார்கள். இந்த போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது.
அதுமட்டுமல்லாது, சென்னை அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் அபாகஸ் நிறுவனம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கணித பாடப்பிரிவில் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களும் பங்கேற்றார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கம், பரிசு பொருள்கள் மற்றும் வெற்றி கோப்பைகளையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி பேசியதாவது:
இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியதும் கொடுத்து வருகிறார். கல்வில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதோடு அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப்பட்டது போல மாணவர்களுக்கும் கல்வித் உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை பெற்றோர்கள் பயன்டுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
இதுபோன்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த பதவிகளில் சாதனை படைக்க இந்த போட்டி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்களது முதல் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும், அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button