Home

“ஹாட் ஸ்பாட் 2” திரைப்படவிமர்சனம்…

“ஹாட் ஸ்பாட் 2” திரைப்பட
விமர்சனம்…

நடித்தவர்கள் :-
பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பிரிஜிதா, பவானி

ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், அஷ்வின், சஞ்சனா திவாரி,

கே.ஜே.பாலமணி
மார்பன், விக்னேஷ் கார்த்திக்.மற்றும்
பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : –
விக்னேஷ் கார்த்திக்.

மியூசிக்:-சதீஷ் ரகுநாதன்.

ஒளிப்பதிவு :-
ஜெகதீஷ் ரவி.
ஜோசப்பால்.

படத்தொகுப்பு:-
யு.முத்தையா.

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநரின் நான்கு பேரின் வெவ்வேறு கதைகள் மூலம்

பார்வையாளர்களின் ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.

முதல் பாகத்தைப் போலவே இதுலும், அதே தயாரிப்பாளரிடம்

அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல்

பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும்

விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது.

அது என்ன ? அதன் மூலம் மக்களுக்கு இயக்குநர் எதை

புரிய வைக்கிறார் ? என்பது தான் கதைக்களம்.
“ஹாட் ஸ்பாட் 2”.

திரை நட்சத்திரங்களின் வெறித்தனமான ரசிகர்கள்,

பெண்ணியம் மற்றும் அவர்களது ஆடை சுதந்திரம் என்ற பெயரில்

பெரியவர்கள் மனதை புரிந்துக் கொள்ளாத இளசுகள், காதலின் தற்போதைய

நிலையை எண்ணி கவலை கொள்ளும் ஆண்கள், ஆகிய மூன்று

தரப்பினரை அலசும் வெவ்வேறு

கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை

பேசியிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த

மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம்

உலகளவில் பேசுபொருளாக உள்ள ஒரு விஷயத்தை பற்றி

அழுத்தமாக அல்லாமல் மேலோட்டமாக பேசியிருக்கிறார்.
இயக்குநர்.

இந்த ஒரு கதைக்கரு வருகிறது திரைக்கதை மற்றும் காட்சிகளை

வடிவமைத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்த

போராடுவதை விட, சமூகப் பிரச்சனைகளை பேசும் சின்ன சின்ன குட்டி

கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக

தொடர்ந்திருப்பது முதல் பாகத்தின்‌ கதையை போலவே கொடுப்பதால்,

சில இடங்களில் சறுக்கல்களை சந்தித்திருக்
கின்றனர். அதே

சமயம், முதல் பாகத்தைப் போல் பெரும் சர்ச்சையாக அல்லாமல், ஒரு

எல்லைக்குள் வலம் வந்திருக்கிறார். விக்னேஷ் கார்த்திக், பேசும் ஒவ்வொரு பிரச்சனையிலும்,

இரு தரப்பினும் இருக்கும்

நியாயத்தை பேசி, நடுநிலையாக நின்றிருக்கிறார்.

கதைகளின் கரு மாந்தர்களாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா,

எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன்,

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர்

கே.ஜெ.பாலமணி
மர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா

திவாரி ஆகியோர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்

பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு

உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவருக்கு

கொடுக்கப்பட்டி
ருக்கும் ஆக்ஷன் கொஞ்சம் ஓவர் தான்.

தற்போதைய காதலின் நிலையையும், பெண்களின்

மனங்களையும் நினைத்து கவலை கொள்ளும்

கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஷ்வின் நடிப்பில்

முதிர்ச்சி தெரிகின்றன. அவரது நண்பராக

நடித்திருக்கிறார் அமரனின் டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கிறது.

அழுத்தமான கதாபாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில்

எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது

அதிரடியான செயல் மூலம் 2கே கிட்ஸுகளுக்கு

அதிரடியான அறிவுரை வழங்கி

தம்பி ராமையா அதிர்ச்சியளித்திருக்கிறார்.அவருக்கு சபாஷ்.

நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப

ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம்

ஈர்த்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.

சதிஷ் ரகுநாதன் இசையில் ஹாட் ஸ்பாட்டின் முதல் பாகத்திற்கான

பீஜியம் மற்றும் பின்னணி இசையின்

காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்
கிறது.

யு.முத்தயனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின்

கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்,

சூடான விஷயங்களை சுவைபட சொல்வதுடன், அதுல இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும்

நியாயத்தை சமமாக பேசி, அனைத்து

தரப்பினரையும் சிந்திக்க வைக்க முயற்சித்திருக்கிறார்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் சிந்தனை சமூக

பிரச்சனைகளை விவாதிப்பது மட்டும் இன்றி, அதில் இருக்கும்

சந்தேகங்கள் குறித்து பார்வையாளர்
களிடம் பல கேள்விகளை முன்

வைத்து, சூடான விவாதங்களும், கேள்விகளும் தொடரும், என்ற

ரீதியில் படத்தை முடித்திருப்பது பாராட்டுக்குறியதாக இருந்தாலும், ஒரே

பாணியில், ஒரு நிலையான தீர்வு சொல்லாமல்

தொடர்வது பார்வையாளர்களை கொஞ்சம் சோர்வடைய வைக்கின்றன.
படம்
பார்த்தத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆச்சரியம் இந்த படத்தில் ஆண்ணுக்கும்

பெண்ணுக்கு இருக்கும் ஈகோ
வைத்து அவர்கள் அணியும் ஆடைகளை வைத்து கதை நகர்கிறது.
அனைவரும்

திரையரங்குகளில் கண்டிப்பாக வேண்டிய திரைப்படம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button