HomePress Release

வேளம்மாள் பள்ளியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு சிறப்பான பாராட்டு விழா !

வேளம்மாள் பள்ளியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு சிறப்பான பாராட்டு விழா !

சென்னை 28.02.2025 இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் D அவர்களை கௌரவிக்கும் சிறப்பு பாராட்டு விழா வேளம்மாள் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 4,000 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்திய செஸ் விளையாட்டில் அவர் ஏற்படுத்திய சாதனைக்காக, வேளம்மாள் நெக்ஸஸ் நிர்வாக இயக்குநர் திரு. M.V.M. வேல்மோகன் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் திரு. ஸ்ரீராம் வேல்மோகன் அவர்களால் ₹1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்:

குகேஷின் வெற்றியை போற்றும் விதமாக 100 டிரோன் அமைப்பு நிகழ்ச்சி

பிரபல கொரிய K.POP பாடகர் மற்றும் நடனக் கலைஞர் Aoora அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி.

மாணவர்கள் லேசர் ஷோவுடன் அற்புதமான பாராட்டு நடனம்

நிகழ்ச்சி நிறைவில் 200 பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சி வேளம்மாள் பள்ளிக்குழுமத்தின் பெருமையையும், உலக அளவிலான சாதனைகளை ஊக்குவிக்கும் அதிசயக் கல்வி முறையையும் எடுத்துக் காட்டுகிறது.

இச்செய்தியையும் படத்தையும் தங்களின் நாளிதழ், இணையத்தளம் முதலானவற்றில் வெளியிட்டு உதவுமாறு அருள்கூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button