Home

“யூத்” திரைப்பட விமர்சனம்…

“யூத்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்: –
கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சூரஜ்

வெஞ்சனமொடு, தேவதர்ஷினி.
மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:- கென் கருணாஸ்

மியூசிக்:- ஜி.வி.பிரகாஷ்
குமார்.

ஒளிப்பதிவு :-
விக்கி.

படத்தொகுப்பு:-
நாஷின்

தயாரிப்பாளர்கள்:- பார்வதா என்டர்டெயின்

மென்ட்-கருப்பையா சி.ராம், சுலோச்சனா குமார்
10-ம் வகுப்பில் மிக

குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11- ம்

வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் மீது கவனம் செலுத்துகிறார்.

அப்பாவின் அக்கறை, அம்மாவின்

நம்பிக்கை இரண்டையும் நினைத்துப்

பார்க்காமல் வயதின் கோளாறில் எந்த நேரமும் காதல்

மயகத்திலேயே திளைத்து இருக்கும் கென்
கருணாஸ்,
12- ம் வகுப்பு முடிப்பதற்குள்

மூன்று பெண் களிடம் காதல் செய்கிறார். இப்படி

காதல் மட்டுமே தனது வாழ்க்கை என்று நினைத்துக்

கொண்டிருக்கிறார். கென் கருணாஸுக்கு,

அதை விட வாழ்க்கையில் மிக முக்கியமானது படிப்பும், குடும்பமும்

தான் என்பதை புரிய வைக்க கூடிய ஒரு சம்பவம் நடக்கின்ற. அது என்ன ? அதன்

மூலம் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, என்பதை

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளசுகளுக்கு பிடிக்கும் வகையில்

சொல்லியிருப்பது தான் இந்த திரைப்பட கதைக்களம்…
“யூத்”.
ஸ்கூல் மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக

பொருத்தும் வகையில் கென் கருணாஸ், காமெடி,

செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் அளவாக நடித்து

பாராட்டு பெற்றுவிடுகிறார்.

விஜய், தனுஷ், சிம்பு ஆகியோரது சாயல் அவரது நடிப்பு மற்றும் உடல்

மொழியில் இருப்பதால் , தனது துள்ளல் நடிப்பு மூலம்

படம் முழுவதையும் யூத்‌ புல்லாக நகர்த்தி கொண்டு போகிறார்.

அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ்,

பிரியான்ஷி யாதவ் என மூன்று கதாநாயகிகளும் காதல், குறும்பு,

அன்பு என்று மூன்று விதமான உணர்வுகளை

வெளிப்படுத்தி படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறார்
கள்.

கதாநாயகனின் தந்தையாக
நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மகன்கள் மீதான

அக்கறையை மனதில் வைத்துக்கொண்டு முகத்தில் கோபத்தை வெளிக்காட்டும்

அப்பாக்களை பிரதிபலித்திருக்
கிறார்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். தேவதர்ஷினிக்கு வழக்கமான

அப்பாவித்தனமும், அளவில்லா அன்பும் கொண்ட அம்மாவின்

கதாபாத்திரம் வெகுவாக நடிப்பில் ஜொலிக்கிறார்

என்றாலும், அதை நிறைவாக செய்து பார்வையாளர்கள்

மனதில் இடம் பிடிப்பதுடன், இளைஞர்களுக்கு அவர்களது மனதில்

அம்மாக்களை நினைவுப்படுத்தி விடுகிறார்.

கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள். அனைத்து நடிகர்கள் வெகுவாக எனர்ஜியுடன்

நடித்திருக்கிறார்கள். அவர்களது உடல் மொழி மற்றும் டைமிங் வசனங்கள் படத்தை

கலகலப்பு ஊற்றி நகர்த்தி செல்ல பெரிதும் உதவியிருக்கிறார் கள்.

“யூத்”படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு காட்சிகளை யூத்புல்லாகவும்,

கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி.

பழக்கப்பட்ட கதை என்றாலும் அந்த உணர்வில் இருந்து பார்வையாளர்களை வெளியேற்றி

படத்தை ரசிக்க வைப்பதில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை முக்கிய

பங்காற்றியிருக்
கின்றன. பாடல்கள் ஆட்டம் போட

வைக்கிறது என்றால் பின்னணி இசை திரைக்கதையை

தொய்வில் இருந்து மீட்டெடுத்து விடுகிறது.

நாஷின் படத்தொகுப்பு மற்றும் ராமு

தங்கராஜின் கலை இயக்கம் இரண்டும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.
இளைஞர்களுக்கான ஒரு கதையாக இருந்தாலும், அதை மிக நாகரீகமாக

கையாண்டிருக்
கிறார் கென் கருணாஸ், பெற்றோருக்கும்,

பிள்ளைகளுக்கும் இடையிலான புரிதல் மற்றும்

செண்டிமெண்ட் காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு,

இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி அனைத்து

தரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் மற்றும் கதாநாயகனாக பயணித்து, தன் கதாபாத்திரத்தை

எந்த இடத்திலும் தனித்துவம் படுத்தாமல்,

திரைக்கதையை மட்டுமே முன்னிலைப்படுத்தி படத்தை

நகர்த்தி யிருக்கிறார். கென் கருணாஸ், மற்ற

கதாபாத்திரங்
களுக்கு முக்கியத்துவம்

கொடுத்து படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்கிறார்.

காதல் தான் வாழ்க்கை, என்ற மனநிலையில் பயணிக்கும்

இளைஞர்களுக்கு இதுபடிப்பும், குடும்பமும் தான் முக்கியம் என்ற

அறிவுரை சொல்லும் கதையை, ஏற்கனவே வெளியான சில

படங்களின் சாயலுடன் கையாண்டிருப்பது, எந்தவித தொய்வு இல்லாமல் ஆரம்பம்

முதல் முடிவு வரை, நகைச்சுவையோடும், ரசிக்கும்படியாகவும்

படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார். கென் கருணாஸ், கதாநாயகனாக மட்டும் இல்லாமல்

இயக்குநராகவும்
பயத்திருப்பது மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

“யூத்”படம் பார்த்தத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும்

கவரும்.‌ ‌கட்டாயம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button