Press Release

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறதுதங்கம், வைரம், சாலிடையர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகளின் சிறப்புத் தொகுப்பு !

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது
தங்கம், வைரம், சாலிடையர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகளின் சிறப்புத் தொகுப்புடன்


மதுரை, 25 ஆகஸ்ட் 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), மதுரையில் வரும் 26 மற்றும் 27 ஆகஸ்ட் 2026 ஆகிய இரு நாட்களில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது. Fortune Pandiyan Hotel, Pandyan Hall, SH 72, Outpost, Ramaond Reserve Line, Madurai-யில் நடைபெறும் இக்கண்காட்சி, VBJ-யின் தனித்துவமான கைவினை நேர்த்தியை மதுரை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான நகைகளைப் பார்வையிடும் வாய்ப்புடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் பெறும் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. கண்காட்சி இரு நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
மணமகளுக்கான பிரம்மாண்ட நகைத் தொகுப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நேர்த்தியான நெக்லஸ்கள் முதல் அன்றாடம் அணியக்கூடிய வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், செயின்கள் மற்றும் வண்ணக் கற்கள் பதித்த நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் இங்கு கண்டு தேர்வு செய்யலாம். பாரம்பரிய நகைக் கலைநயத்தையும் நவீன வடிவமைப்புகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, சிறந்த தரம் மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனுடன் காலத்தால் அழியாத நகைகளை உருவாக்குவதில் VBJ கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், VBJ விரைவில் கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் புதிய ஷோரூமை திறக்கவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button