Cinema

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்!

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்

சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் – ‘ஃபௌஜி- Fauzi’ படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது… மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்… இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல… ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது.

பிரபாஸின் தீவிரமான புதிய தோற்றம்-  ஃபௌஜி படத்திற்கான  முக்கியத்துவத்தை போற்றுவதாக இருக்கக்கூடும். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது. இணைய உலகம் இதற்கு உடனடியாகவும், உற்சாகத்துடனும் எதிர்வினையாற்றி வருகிறது.

பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வலுப்பெற்று வருகிறது. இது வரவுள்ள இப்படத்தின் பிரம்மாண்டத்தையும்.. அதன் லட்சியத்தையும் …இந்த மாற்றம் பிரதிபலிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அதே தருணத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க இது ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களுக்கு உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் பிரபாஸ் ஒருவராக திகழ்கிறார். எளிமையானதாக தோன்றினாலும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுய விவர புகைப்பட மாற்றம்-  அடுத்து வரவிருப்பதைப் பற்றிய அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

பொழுதுபோக்கு சார்ந்த பக்கங்களிலும்… ரசிகர் மன்றங்களிலும்… இது தொடர்பான விவாதங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சுய விவர பட மாற்றம் சாதாரண சமூக ஊடக அப்டேட் என்பதை கடந்து.. ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றம் பெற்றுள்ளது. இது பிரபாஸ் மீதான உற்சாகத்தை மீண்டும் எழுச்சி அடைய செய்துள்ளது. இது ஃபௌஜி- Fauzi படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் விரிவடைய செய்துள்ளது. அத்துடன் சூப்பர் ஸ்டாரின் திரைபயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் வருகையை உணர்த்தும்… மறக்க முடியாத தருணத்தையும் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button