அரண்மனை.4,திரைவிமர்சனம்


அரண்மனை.4,திரைவிமர்சனம்!!
குஷ்பு சுந்தர். ACS.அருண்குமார்.தயாரித்து சுந்தர் சி.இயக்கி வெளிவந்திருக்கும் படம் அரண்மனை-4
சுந்தர்.C தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திரா ராஜு, யோகிபாபு,கோவை சரளா, VTV.கணேஷ், K.S.ரவிகுமார், ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், ராஜேந்திரன்,
சிங்கம்புலி,தேவாநாதா, மற்றும் பலர் நடித்துள்ளார்
இசை .ஹப்ஹாப் தமிழா.ஆதி
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி அனைத்தும் மெய் மறந்து சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் அவ்வபோது இணையும் மறைந்த சேசுவின் காட்சிகள் காமெடி போனஸாக அமைந்திருக்கிறது.
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள்
திரைக்கதை
யோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸில்
வரும் அம்மன் பாடல் ஆக்ரோஷமாகவும், பக்தி மயமாகவும் அமைந்திருக்கிறது. திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படத்திற்காக செய்த செலவுகளை காட்சிகளில் கச்சிதமாக வெளிப்படுத்தி
யிருக்கிறார்.
கலை இயக்குநரின் கைவண்ணம் காட்சிகளில் தெரிகிறது. பிரமாண்ட அம்மன் மற்றும் அசுரன் சிலை, அதனுள் நடக்கும்
க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் என அனைத்துமே வெறும் கமர்ஷியல் படம் என்பதையும் தாண்டி ரசிகர்களை கவரக்கூடிய அம்சங்களாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் சுந்தர்.சி வழக்கம் போல் லாஜிக்குகளை ஓரம் வைத்துவிட்டு,
பொழுதுபோக்கு என்ற மேஜிக்கை மிக பிரமாண்டமாக செய்திருக்கிறார். முந்தைய மூன்று அரண்மனை படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று, என்று சொல்லும் வகையில் திரைக்கதை
மற்றும் காட்சிகள் அமைந்திருந்தாலும், அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநராக சுந்தர்.சி அதிகம்
மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே மனதில் வைத்து
படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் சுந்தர்.சி, காட்சிக்கு காட்சி சிறுவர்களை கொண்டாடவும், குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார். ஒரு பக்கம்
பேயின் மிரட்டல் மறுபக்கம் நட்சத்திரங்களின் நகைச்சுவை விருந்து, என இரண்டையும் அளவாக கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும்
தன்வசப்படுத்தும் இயக்குநர் மொத்த படத்தையும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தி சில
இடங்களில் சினிமா ரசிகர்களையும் வியப்படைய செய்கிறார்.
சிம்ரன் மற்றும் குஷ்பு இடம்பெறும் இறுதிப் பாடல் காட்சி ஆட்டம் போட வைக்கும் அதிரடியான பாடலாக மட்டும் இன்றி இரண்டு
முன்னணி நடிகைகள் இணைந்து தோன்றும் வகையில் திரையரங்கில் விசில் சத்தங்கள் காதை பிளக்கிறது.
இவர்களுடன் ரம்யா கிருஷ்ணனையும் எங்காயாவது நுழைத்திருந்தால், டோனி மைதானத்துக்குள் நுழையும் போது
ரசிகர்கள் போடும் சத்தத்தை விட, அதிகமான சத்தம் திரையரங்குகளில் ஒலித்திருக்கும்.
கோடைக்கால விடுமுறையில்
சிறுவர்களுடன் சேர்ந்து குடும்பமாக பார்க்க கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில்
வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கும்
இயக்குநர் சுந்தர்.சி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘அரண்மனை 4’ கோடை விடுமுறையை கொண்டாடும்
குழந்தைகளை கூடுதல் குஷிப்படுத்தும்.
மொத்தத்தில் காட்சியமைப்பில் அலங்கரிக்கும் அரண்மனை ”4”