HomePress Release
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு. !


இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.
ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI) என்பது இந்தியத் திரைப்படத் துறையின் ஒரு அமைப்பாகும். அதில் ஏறக்குறைய 18,000 திரைப்பட தயாரிப்பாளர்கள், 20,000 விநியோகஸ்தர்கள், 12,0000 ஸ்டுடியோ உரிமையாளர்கள் உள்பட பலர் உறுப்பினராக உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் இந்திய சினிமாவினை உலக தரத்திற்கு மேம்படுத்துவதே ஆகும்.
இந்தநிலையில் FFI இன் முதல் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது, இதில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.