வண்டலூர் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஶ்ரீ மஞ்சார் குழலி உடனமர் ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் விழா !


வண்டலூர் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஶ்ரீ மஞ்சார் குழலி உடனமர் ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் விழா


வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஶ்ரீ மஞ்சார் குழலி உடனமர் ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, கடந்த திங்கட்கிழமை காலை விநாயகர் பூஜையும் மாலை முதல்கால யாக ஹோமத்துடன் மஹா கும்பபாபிஷேகம் நிகழ்ச்சிதுவங்கியது .
செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் காலசாலை ஹோமம் பூஜை அடுத்ததாக ஶ்ரீ மஞ்சார் குழலி உடனமர் ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி நடைப்பெற்றது.
நேற்று மாலை மூன்றாம் காலஹோமம் யாக பூஜையும், இன்று காலை நான்காம் கால யாகஹோமம் பூஜை நடைப்பெற்று.
பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு கோயிலை சுற்றி வந்து ஆலய விமான மண்டப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் முழுங்க மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து பரிவாரா மூர்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீ கனகாம்பிகை உடனாய ஸ்ரீ கைலாசநாதருக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


