News
ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது

சென்னை: தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து கொண்டு புதுப்புது உச்சங்களைத் தொட்டு அதிரடி காட்டிவந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (ஏப்.23) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

அடுத்தடுத்து திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறும் மாதங்கள் வருவதால் தேவைக்காக நகை வாங்கும் சாமான்யர்கள் இந்த விலை குறைவால் ஆறுதல் அடைந்துள்ளனர்.