Press Release

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

எம்டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியை நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் இந்த சீசனில் தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். மிஸ்சீஃப் மேக்கர் எனும் குழப்பவாதி ரோலில் உர்ஃபி ஜாவேத் வேறலெவல் குழப்பங்களை காதலர்களுக்கு இடையே உண்டு பண்ணி வருகிறார்.


14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 15வது சீசனையும் சன்னி லியோன் சக்சஸாக பல எபிசோடுகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த நந்து ஏற்கனவே எம்டிவியின் ரோடீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.


ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காத நிலையில், அதன் முதல் எபிசோடை பார்த்து விட்டு தனது நண்பர்களுடன் ரியாக்‌ஷன் கொடுத்துள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.


சன்னி லியோன் மஞ்ச காட்டு மைனாவாக நிகழ்ச்சியை ஆரம்பித்து தமிழில் அவருக்கு சரியான டப்பிங் கொடுக்கப்பட்டதை பார்த்து ஆடிப் போய் விட்டார் நந்து. மேலும், பெண் போட்டியாளர்கள் கலர் கலர் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு உள்ளே என்ட்ரி கொடுக்க இவர் சூப்பர், அவர் ஹைட்டா இருக்காரு என தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே இந்த ஷோவை பார்த்து ரியாக்‌ஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். நந்துவின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் கூட புதிய காதலியை தேடி கண்டுபிடிக்க அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதாகவும் வீடியோவில் பேசும் போது கூறியுள்ளார். போட்டியாளர்களில் அதிகம் பெண் போட்டியாளர்கள் குறித்த கமெண்ட்டுகளை நந்துவின் நண்பர்கள் பேசி சிரித்து தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டனர். தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டேட்டிங் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கி விட்டதாக நந்து கூறியுள்ளார்.
காதல், மோதல் பஞ்சாயத்து என MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வேறலெவல் என்டர்டெயின்மென்ட்டை கொடுத்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button