

“அருள்வான்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
அருள்நிதி,
கிருத்திகா, ஆரவ்,ரம்யா
பாண்டியன்,
காளி வெங்கட் ஜான் விஜய், விடிவி கணேஷ், பருத்தி
வீரன் சரவணன், அருள்தாஸ் ,மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
கணேஷ் விநாயகம்.
மியூசிக்:-
ஜிவி.பிரகாஷ்
குமார்.
ஒளிப்பதிவு:-
எம்.சுகுமார்.
படத்தொகுப்பு:-
லாரன்ஸ் கிஷோர்.
கலை இயக்குனர்:-
லால்குடி இளையராஜா.
தயாரிப்பாளர்கள்:-
எஸ்.ஜி சரவணன்.
இயற்கை வானப்பகுதியில்
பச்சை பச்சையான மலைகுன்றில்
தொலைதூரத்து
மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியான
கிருத்திகா என்ற சிறுமி படிக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறாள். ஆனால், அவளது வாழ்க்கை சூழல், வறுமையில் அடிப்படை வசதிகள் அவளுக்கு
இல்லாமல் இருக்கிற வீடு இருப்பிடம் கூட பயனற்றது.
ஆகியவை அவளது கல்வி கனவுக்கு மிக தடையாக இருக்கின்றன.
இருப்பினும் எப்படியும் படித்தாக வேண்டும் என்று என்பதில் மிகவும் ஈடுபாட்டுடன் காட்டுவது, தனது
மலை கிராம பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற
அவளது பெரிய லட்சியப் பயணம்
அதனால் அவள் மாவட்ட ஆட்சியரான அருள்நிதி காணவேண்டும்.
என்று. ஆவலுடன் பார்த்து பேசி தனது
படிக்கும் ஆர்வத்தை சொல்வது என்று உறுதியாக இருக்கிறாள்.
அவளது முயற்சி கல்விக்காக
மலைவாழ் சிறுமியின் கல்வி கனவு நிறைவேறியதா?
இல்லையா ? என்பதை சமூக பொது அக்கறையுடன்
சொல்வது தான் “அருள்வான்”. என்ற திரைப்பட கதைக்களம்.
மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக
உழைக்கின்ற ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அருள்நிதி, தனது
முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்துவேல் என்ற கலெக்டர்
கதாபாத்திரத்திற்க்காக நியாயமான நேர்த்தியான சிறப்பாக நடித்திருக்கிறார்.
அமைதியான அவரது நடிப்பும் மற்றும் தனது உடல் மொழியில்
படத்திற்கு பெரும் பலம் கொடுத்திருக்
கிறார். நாயகன்
என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உண்மையான
கலெக்டர் என்ற பாத்திரத்திற்கு மெருக்கேற்றி சரியான நடிபங பாராட்டு பெறுகிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார். ஆரவ், பழங்குடியினராக
தன்னை பழங்குடியினராக மாற்றிக்கொண்டு கடுமையாக நடிப்பில் உழைத்திருப்பது திரையில்
தெரிகின்றன. சில காட்சிகளில் அவர் கதாபாத்திரத்துடன்
தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார். ரம்யா பாண்டியன்
தனக்கான பணியை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
பழங்குடியின சிறுமியாக நடித்திருக்கிறார். கிருத்திகா, தனது
எதார்த்தமான அழுத்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
கல்வி படிப்பின் மீது இருக்கிற ஆர்வம், பெற்றோரை பிரிந்து வந்த பிறகு
ஏற்படுகிற பயம், ஏக்கம், தவிப்பு என அனைத்து
உணர்வுகளையும் மிக நேர்த்தியாக முகபாவனையில் காட்டி தனது நடிப்பை படத்திற்கு சிறப்பாக தந்திருக்கிறார்.
காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் ஆகியோர்
திரை நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் மலைகளின் இயற்கை அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்வியல்
வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு நேர்த்தியாக காட்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும்
கதைக்களத்தின், கதை மாந்தர்களின் மனசுக்குள் இருந்த போராட்டங்களை
பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொரு பின்னணி இசையில் வலி மிகுந்த மலைவாழ்
மக்களின் வாழ்க்கை வாழ்வியல் விவரிக்கிறது காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளது.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு
திரைக்கதையில் கொஞ்சம் மெதுவாக போனாலும்,
உண்மை சம்பவங்களை உணர வைக்கிற விதத்தில் படத்தை நகர்த்தி செல்
கின்ற ன.
வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க தற்போதைய
காலக்கட்டத்தில், கல்வியும், அடிப்படை
தேவைகள் கிடைக்காத மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்
கள், என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்
கிறார் இயக்குநர்
கணேஷ் விநாயகம், பழங்குடியின மக்களின் உண்மை
நிலையை எவ்வித சமரசமும் இல்லாமல் அழுத்தமாகவும்,
நேர்மையாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார்.
கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத திரைக்கதை சில இடங்களில் உண்மைச் சம்பவங்களை
ஆவணப் படம் பார்க்கும் உணர்வை
ஏற்படுத்துவதில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக
கொண்டு வடிவமைக்கப்பட்டுஉள்ள காட்சிகள் மனதை பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் கணேஷ் விநாயகம், தொலைதூரக் கிராமங்களில் வாழும்
பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான
போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்வதில் வெற்றி
பெற்றிருக்கிறார். பார்வையாளர்களை மட்டும்
இல்லாமல் ஆட்சியாளர்களை சற்று யோசிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில்,
அருள்வான்’ கல்வி கற்றவர்கள் மேன் மேலும். உயர்ந்த
உச்சியில் கொண்டு போகும் என்பதை சமூக அக்கறையுடன்
கல்வி சிர்திருத்தங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.கல்வியை
அக்கறையுடன் தேடிப்
படித்தால் கலெக்டர் ஆகலாம். என்ற நல்ல படைப்பை கொடுத்த
இயக்குநருக்கு பாராட்ட வேண்டும்.
அனைவரும் திரையரங்குகளில்
ஒவ்வொரு மாணவ மாணவியரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.



