News
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.