Cinema

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன.

முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு புதிய தொடக்கங்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. வழக்கமான பாணியில் பயணிக்காமல், துணிச்சலான புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பல சுவாரசியமான வாய்ப்புகளுக்கு அவர் வழிவகுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவரது திரைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் மலரவிருக்கிறது.
சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) மற்றும் சமந்தா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் தற்போது கைகோர்த்துள்ளனர். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும், மகிழ்விக்கவும், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளைத் தூண்டவும் கூடிய ஒரு பிரம்மாண்டமான கூட்டணியின் தொடக்கமாக இது அமைந்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான, கொண்டாடப்படும் நடிகையாகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் வலம் வரும் சமந்தா, எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, எதிர்பார்ப்புகளை உடைப்பதில் வல்லவர். அவரது ஒவ்வொரு புதிய முடிவும் பேசுபொருளாக மாறும் நிலையில், இந்தக் கூட்டணியும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், சமந்தாவின் தனித்துவமான ஈர்ப்பும், சோனி லிவ் தமிழின் தரமான பொழுதுபோக்குக் கதைகளும் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து நடிகை சமந்தா பகிர்ந்து கொண்டதாவது:

“மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழ் உடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகச் சிறந்த, சுவாரசியமான ஒரு புராஜெக்ட்டிற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். அதைப்பற்றிய விவரங்களை மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button