Cinema

இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த ‘இசைஞானி’ இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம். !

இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த ‘இசைஞானி’ இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம்.

‘இசைஞானி’ இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்து 14.5.2026 இன்று 51-வது ஆண்டில் நுழைகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, ”ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் உற்சாகமாய்.

பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தான் இசையமைத்த முதல் படம் பற்றியும், அன்றைக்கும் இன்றைக்கும் ரசிகர்களின் மனதில் அசைக்கமுடியாத இடம்பெற்றிருக்கிற ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடலுக்கு இசையமைத்த விதம் பற்றியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இளையராஜாவின் 51-ம் வருட இசைப்பயணத் துவக்கத்தையொட்டி வாழ்த்த வந்திருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்பில் உடனிருந்தனர். பாடலாசிரியர் பா.விஜய் இளையராஜாவுக்கு மாலையணிவித்து, வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார். 

திரைப்பட பத்திரிகையாளர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button