HomePress Release

33வது பட்டமளிப்பு விழா !! அமர்வு 2

33வது பட்டமளிப்பு விழா !! அமர்வு 2

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைக்கழகமானது பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், பல்மருத்துவம், செவிலியர் துறை, உணவு சமையற்கலை, மற்றும் கலை, அறிவியல் முதலிய உயர் கல்விதுறைகளில் கடந்த முப்பத்து எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணித்து வருகின்ற கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்தப் பல்கலைகழகத்தின் முப்பத்து மூன்றாவது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடி A.C.S. மருத்துவமனையில் அமைந்துள்ள கன்வென்சன் அரங்கில் ஆகஸ்ட் 17ம் நாள் காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடந்தேறியது. அப்போது தேர்வில் வெற்றி பெற்ற 4000 U.G., P.G., மற்றும் Ph.D. மாணவ மாணவியர்களுக்கு ឈឈប់ យ ប Ph.D., M.B.B.S., MD/MS., M.D.S., B.D.S, B.Sc(N), A.H.S.,B.Pharm, D.Pharm, B.P.T., M.P.T., M.SC(N), M.B.A.M.C.A.வழங்கப்பட்டது. இதுபற்றி இப்பல்கலைகழகத்தின் பதிவாளர் Dr.C.B.பழனிவேலுஅவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் Dr.I.முருகன் மாண்புமிகு மாநில தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அவர்கள் பட்டமளிப்பு விழாவின் சிறப்புவிருந்தினராக பங்கேற்று, முப்பத்து மூன்றாவது பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். மேலும் மாணவமாணவியருக்கு முனைவர் பட்டங்களையும் மற்றும் அனைத்து துறைகளிலும் முதல் இடங்களை பிடித்த முதுநிலை மற்றும் இளநிலைபட்டதாரி மாணவமாணவியருக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி மாணவர்களிடையே தன் உரையை நிகழ்த்தினார். மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டங்கள், நடிகர் “ஆக்ஷன் கிங்” அர்ஜுன், திரைப்படஇயக்குநர் திரு.P.வாசு மற்றும் DRDL புகழ்பெற்ற விஞ்ஞானி Dr.G.A.சீனிவாச மூர்த்தி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டன.

இப்பல்கலைகழகத்தின் வேந்தர் Dr.A.C. சண்முகம் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தலைவர் Er. A.C.S. அருண் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். A.C.S. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலாளர் திரு.A.ரவிக்குமார், துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி, முதன்மை கல்வியாளர் Dr. G. கோபாலகிருஷ்ணன், முகவர் Dr. D. விஸ்வநாதன், இணை துணை வேந்தர்கள் Dr. M. இரவிச்சந்திரன், Dr.C.S.ஜெயசந்திரன், இயக்குநர் சட்டம் Dr.G.C.கோதண்டன், -N. – IAS (Retd.)-Project Director, Dr. K. ស្រល់ – IAS(Retd.), Special Officer-ACSMCH, . A. IAS (Retd.)-Special Officer-SLMCH, Dr.C.B.பழனிவேலு, மற்றும் அதிகாரிகள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த சிறப்புமிகு முப்பத்து மூன்றாவது பட்டமளிப்பு விழா எந்நாளும் தங்களின் மனதை விட்டு அகலாத நிகழ்ச்சியாய் அமைந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button