Home

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’ வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “’மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது. இந்தமுறை உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பல திறமையான நடிகர்களுடன் மிகப் பெரிய அளவில் முழுமையான அல்டிமேட் என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது” என்றார்.

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை ARK சரவண் இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் & K V துரை ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, RDC மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் கீழ் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள்: இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம் – ARK சரவண்,
இசை – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,
கலை இயக்கம் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பு – திருமலை ராஜன் R,
வசனம் – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,
உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,
நடன அமைப்பு – ரகு தாபா,
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் P,
தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,
ஒலி கலவை – உதயகுமார்,
VFX – ரெசோல் FX,
VFX மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,
மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,
சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button