“ராஜா சாப்” திரைப்படவிமர்சனம்…


“ராஜா சாப்” திரைப்பட
விமர்சனம்…
நடித்தவர்கள் :- பிரபாஸ், சஞ்சய் தத், போமன் இரானி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி
குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – மாருதி
மியூசிக் :- தமன். எஸ்.
ஒளிப்பதிவு :-
கார்த்திக் பழனி.
படத்தொகுப்பு:-
கோட்டகிரிவெங்கடேஸ்வர ராவ்.
தயாரிப்பாளர்கள் :- பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ஐவி என்டர்டெயின்மென்ட் – டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்.
பல வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன தனது
தாத்தாவை தேடி வருகின்றனர் நாயகன் பிரபாஸ், பலவிதமான
மாய வித்தைகளை கற்று தேர்ந்த பயங்கரமானவர்.
மந்திரவாதியான சஞ்சய் தத், தான் தனது
தாத்தா என்பதை தெரிந்துக் கொள்கிறார். ராஜா
சாப்
அதே சமயத்தில தனது தாத்தாவை நெருங்கி முயற்சிக்கும் போது,
அவருக்கு பலவித திடீரென்று திடுக்கிடும்
உண்மைகள் தெரிய வருவதுடன், தாத்தாவுடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஏன்
இந்த மோதல் ? , என்பதை இதனால் பிரபாஸின் வாழ்வில்
எத்தகைய சிக்கல்கள் வருகிறது, அதுல இருந்து அவர் எப்படி
மீண்டுவருகிறார்.? என்பதை திகில், ஃபேண்டஸி உள்ள மர்மமான அனைத்து விதமான
மசாலாவுடன் கலந்து கொடுத்திருப்பதுடன் தான் “ராஜா சாப்”. கதைக்களம்.
“பாகுபலி” படத்திற்குப் பிறகு ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களின்
பட்டியலில் இடம் பிடிப்பதுடன் முயற்சியாக பல பிரமாண்டமான
ஆக்ஷன் படங்களில் நடித்து வருபவர் பிரபாஸ், அவர் நடித்த
படங்கள் எல்லாம் சரியாக போக வில்லை , மீண்டும் தனது பழையபடி
மசாலாப் படத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்து இந்த ராஜா சாப் படத்தில் நடிக்க வந்திருக்கிறார், இந்த
படத்தின் மூலமாகவும் அவர் பெரும் தோல்வியை
சந்தித்து. உள்ளார் அதுல, கதை இல்லாத படத்தில்
அவர் நடிக்க வேண்டிய என்று நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு
ஏகப்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிப்துடன், அவை எல்லாம் அனைத்தும் எடுபடமால் போயிருப்பதுடன், திரைக்கதையின் ஓட்டத்திற்கு மிக
வேகத்தில் போவது போல நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பதுடன், ஒருவருக்கு கூட அழுத்தமான கதாபாத்திரம்
இல்லை. மூன்று பேரையும் வீட்டில் போட்டு வைத்து, போன்ற பாடல் காட்சிகளும், செட் போட்டு இருக்கிறார்கள்.
பிரபாஸின் தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் பாட்டியாக நடித்திருக்கும் ஜரினா வாஹப் இருவரும் கொடுத்த
வேலையை அவர்கள் சரியாக செய்திருப்பதால், அவர்கள் திரை படத்தில் எந்தவிதமான பலம் சேர்க்கவில்லை. பொம்மன் ராணியாக வந்து போகிறார்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பார்வையாளர்
களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது.
வி.எப்.எக்ஸ் காட்சிகள் தரமானதாக
இருந்தாலும், அவற்றை காட்சிகளுடன்
இணைத்து, படத்தை கலர்புல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டும்படி உள்ளது. இசையமைப்பாளர்
தமன்.எஸ் இசையில் பாடல்கள் கமர்சியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக
இருந்தாலும், பின்னணி இசையின் சத்தம் காதை
பிளாக்கின்ற வகையில் உள்ளது.
பழைய பாணிக் கதை, ரொம்ப மெதுவாக நககிறது திரைக்கதை, தேவையில்லா
காட்சிகள் என படத்தில் நீக்கப்பட வேண்டிய
விஷயங்கள் பல இருக்கின்றன, மூன்று மணி நேரத்திற்கும்
அதிகமான நீளம் வரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர்
கோட்டகிரி வெங்கடேஸ்வர
ராவுக்கு அதிக பணிகள் கிடையாது.
எழுதி இயக்கியிருக்கிறார். மாருதி, தொடர்ந்து
ஆக்ஷன் படங்களில் நடித்து உடல் வலியால்
சோர்வடைந்திருக்
கிறார் பிரபாஸுக்கு, மூன்று நாயகிகளை வைத்து மாயாஜாலம்
வேலையை செய்திருக்கிறார்.
காதல், காமெடி, கவர்ச்சி, திகில், கற்பனை என்று
கமர்ஷியல் படங்களுக்கு தேவையான
அனைத்து விஷயங்களும் படத்தில் இருந்தாலும், அவை
எதுவும் ரசிக்கும்படி இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனம்.தருகிறது.
படம் பார்த்தத்தில், ‘ராஜா சாப்’ பாட்டியின் ரகசியம்
என்ன தாத்தாவின் மாயாஜாலம் பற்றிய வெளிச்சம் என்ன தெரியுமா ? என்பதை கண்டு களிய
வைத்திருக்
கிறார் ராஜா சாப் . திரைப்படத்தில் சிஜி கிராஃப் பிக்ஸ் நிறைந்த படம் அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம்.



