CinemaReview

“ரூம் பாய்”திரைப்பட விமர்சனம் !

“ரூம் பாய்”திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள்:-
சி.நிகில், ஹர்ஷா, இம்மான்

அண்ணாச்சி, பிர்லா போஸ், கற்று கருப்பு கலை, கற்பகம்,

கவிதா விஜயன், சமீர், அருண் ராஜா, சிட்டி ராஜா, பிரபாகர்.
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
ஜெகன் ராயன்.

மியூசிக் : –
வேலவன் சகாதேவன்.

ஒளிப்பதிவு:-
சி.பாரதிராஜன்.

படத்தொகுப்பு:-
டி.வி.மீனாட்சி சுந்தரம்.

தயாரிப்பாளர்கள்:-
ஏசிஎம் சினிமாஸ் – சூரியகலா சந்திரமூர்த்தி.

தொலைக்காட்சி கூர்நோக்கு மையத்தில் இருந்து படித்து முடித்து விட்டு வெளியே வருகிறார்.

கதாநாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதியில் ஒன்றில் ரூம் பாயாக வேலைக்கு

சேருகிறார். அங்கு நடக்கிறபாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல மோசடிகளை அவர்

கண்டுபிடிக்கிறார் நிகில், அதற்கான ஆதாரங்களை கைகளாலும் கைப்பற்றுவதுடன் விடுதியின்

மேலாளரை கொடூரமாக கொலை செய்கிறார். இதனால், அவரை வில்லன் கும்பல்

தேடுகிறார்கள் மறுபக்கம் கூர்நோக்கு மையத்தின்

காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸும் நிகிலை தேடுகிறார்கள்.

இவர்களிடம் சிக்காமல் தப்பித்தாலும், அந்த சொகுசு விடுதியை

சுற்றி சுற்றி வருகின்றனர் நிகில் யார் ?, அவருக்கும் அந்த சொகுசு விடுதி

மற்றும் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் யார் ?மாயமானதற்கும் இருக்கும் தொடர்பு

என்ன ? பின் தொடர்வதை. என்பதை பல

திருப்பங்களுடன் சொல்வது தான்
“ரூம் பாய்” என்ற கதைக்களம்.

அம்மா, அப்பா, தங்கை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் அனைவரை இழந்த அனாதையாகிறார்.

தனது இந்த நிலைக்கு காரணமானவர்

களை தேடி பழி தீர்க்க கிளம்புகிறார் கதாநாயகன்

நிகிலின் பயணமாக கதை நகர்ந்தால் சில உண்மை சம்பவங்களை திரைக்கதையுடன் இணைத்து,

சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் பரபரப்பாக

இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் சி.நிகில், தனது

துடிதுடிப்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நடனம் மற்றும் ஆக்‌ஷன் இரண்டிலும் அசத்தியிருக்கும் நிகில், தனது

வேலையை மிகவும் சரியாக செய்து அறிமுகப்படுத்தி வதில் பாஸ் மார்க் வாங்குகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஹர்ஷாவுக்கு பெரிதாக ஒரு வேலையும் இல்லை. சில காட்சிகள்

மற்றும் ஒரு பாடலுக்கு மட்டும் முகம் காட்டி செல்கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார். அருண்ராஜாவை விட, கூர்நோக்கு மையத்தின்

காப்பாளராக நடித்திருக்கிறார். பிரபாகர்

வில்லத்தனத்தை மிரட்டலாக செய்தியிருக்கிறார்.

இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி

ராஜா, கேரளா பெஹமின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் முக்கியத்துவம்

வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பினும், மனதில் ஒன்றும்நிற்க வில்லை.

வீட்டுக்குள் மற்றும் சொகுசு விடுதியின் அறைகள் அல்லது விடுதி வளாகம் என்று

பெரும்பாலான காட்சிகள் உட்புறங்களில் நடப்பதால், அதற்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கும்

ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன், அதை கதைக்கு ஏற்ற காட்சிகளாக கொடுத்து ரசிக்க

வைத்திருக்கிறார். வேலன் சகாதேவன் இசையில், சூரியமூர்த்தியின் வரிகளில் பாடல்கள்

அனைத்தும் கேட்கும் ரகம், குறிப்பாக ”பட்டர்பிளை கண்ணடிச்சி…” என்ற

காதல் பாடலும், அப்பாவின் பெருமை பேசும் பாடலும் திரும்ப கேட்க வைக்கின்றன.

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

பிரமாண்டமான காட்சியமைப்புகள் இல்லை என்றாலும், திரைக்கதையில் இருக்கிற

திருப்பங்களை, யூகிக்க முடியாதபடி தொகுத்து படத்திற்கு கூடுதல்

விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர்.

உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ்

திரில்லர் பாணி படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்

இயக்குநர் ஜெகன் ராயன், பட்ஜெட் கட்டுப்பாட்டில் பயணித்திருப்பது பிரமாண்டம்

இல்லாத காட்சிகள் மூலம் தெரிந்தாலும், தான் சொல்ல வந்த

கதையை மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்

கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானது, சொகுசு

விடுதியில் நடக்கிற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதனை

வைத்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஆகியவற்றுடன் தவறு ஏதும்

செய்யாத கதாநாயகன் கூர்நோக்கு மையத்தில் இருப்பது, அவரது குடும்ப பின்னணி என்று பல அம்சங்களோடும், பல கதாபாத்திர

வடிவமைப்புகளுடன் திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்த்திருக்கிறார். இயக்குநர் ஜெகன் ராயன், அதை

எந்தவித குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

பொருளாதார ரீதியிலான கட்டுப்பாடுகளால், பிரமாண்டம் இல்லாத காட்சிகள்

பார்வையாளர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், ஒரு கிரைம் திரில்லர்

கதையை மிக நியாயமான முறையில் சொல்லி

பார்வையாளர்
களிடம் பாரட்டு பெற்று விடுகிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.

படம் பார்த்தத்தில், “ரூம் பாய்” பார்வையாளர்கள் முழு திருப்தி தரும் வகையில் திரைப்படம்.
இருக்கிறது.

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button