Home

ராட்ட குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான “U” சான்றிதழ் பெற்ற திரைப்படம்….

ராட்ட குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான “U” சான்றிதழ் பெற்ற திரைப்படம்….

2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது…

ராட்ட இன்றைய திரையுலகில் வருமானத்திற்காக மட்டும் திரைப்படம் எடுக்காமல் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு திரைப்படம் எஃப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் எடுத்துள்ளது. விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்துள்ளது இது திரை சமூகம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இத் திரைப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார் திருமணத்திற்கு முன் சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத இளைஞன் திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க அதன் மூலம் அவன் வாழ்வில் வரக்கூடிய மாற்றம், தன் கணவனின் சிரமத்தை புரிந்த மனைவி கணவனை எவ்வாறு தேற்றி வாழ்க்கையில் வெற்றி பெற இணைந்து பயணிக்கிறார்கள் இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் இத் திரைப்படத்தின் மையக்கரு…

இத்திரைப்படத்தை விரைவில் சி எஸ் எம் கிரியேஷன் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடு செய்கிறது…
இத்திரைப்படத்தில் ஹெலன் சித்தா தர்ஷன் சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ ,ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்…
இத்திரைப்படத்திற்கு எடிட்டிங் லோகேஷ் கேமரா வெற்றி ஒளிப்பதிவில் இசை அமைத்திருக்கிறார் மணி கிருஷ்ணன்…
அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் பெற்று விரைவில் திரைக்கு வர உள்ளது அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் மாபெரும் புத்தாண்டு பரிசாகவும் பொங்கல் கொண்டாட்டமாகவும் அமையும் என படத்தின் இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறி இருக்கிறார்…

விஜயமுரளி
கிளாமர் சத்யா
PRO

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button